இவ்வருடம் துவங்கியதிலிருந்து மார்ச்சின் மத்தியில்தான் வாசிப்பு கொஞ்சம் முடுக்கம் பெற்றிருக்கிறது. இவ்வருடம் துவங்கிய நாளிலிருந்தே இவ்வருடத்தை நான் இதுவரை வாசித்த அனைத்தையும் ஒரு மீள் வாசிப்புக்கு உட்படுத்த எண்ணியிருந்த ஆண்டுதான். இதை நான் நேர வீணென்று கருதவில்லை. அதிக ஆவலோடும் தீவிரத்தோடும் வாசிப்பவன்தான் நான். ஆனால் அதை அப்படியே விழுங்கி எடுத்துக்கொண்டு சொல்கிறேனே அல்லாமல் குறிப்பு ஒன்றும் எடுத்துக்கொண்டதில்லை. ஒரு பயணியை போலவே வாசிப்பனுபவத்தை பெற்றிருக்கிறேன். இவ்வருடம் நான் இதுவரை படித்தவைகளைக் குறித்தான சில சித்திரத்தை உருவாக்கி கொள்கிற ஆண்டாக வைத்துக்கொள்ளலாமென்றே இருக்கிறேன். புதியதாக வரும் சிலவற்றைத் தாண்டி தன்முனைப்பில் வேறொன்றும் நிகழாது. அப்படியே, வாங்கி ரொம்ப நாளாக வாசிக்காமல் வைத்திருக்கும் புத்தகத்தையும் வாசித்துவிட வேண்டும்.
அடித்தளம் சரியாக இருந்தால்தான் எதன் ஒன்றின் மீதும் நிற்க முடியும். ஆகையால் ஒரு குழந்தை போல அனைத்தும் மீள் வாசிப்பு செய்யலாமென்று இருக்கிறேன். ஆம் இதுவரை நான் கற்றுது மிக மிக அதிகம். எல்லாவற்றையும் செய்ய முடியாதெனினும் முடிந்த அளவுக்கு செய்யலாம். இன்றைய தேதிக்கு அடிப்படையே இல்லாமல் ஒரு பெரிய சிந்தனையை எடுத்துக்கொண்டு முன்வைத்திட முடியும். உரையாட முடியும். யாரு நிஜம், யாரு எதிரோலி என்று தெரியாது. அல்லது தெரிந்துக்கொள்வதற்கு நீண்ட காலம் ஆகலாம். ஆகையால்தான் இந்த முயற்சி.
ஆதலால் சில புதியவைகளையன்றி பகிரப்படும் மற்ற அனைத்தும் உங்களுக்கு முன்னே பரீட்சையமானதாக கூட இருக்கலாம். இருந்தால் என்ன வாசியுங்கள். இல்லையெனில் நன்று. விரைவு வாசிப்பு எனக்கு இன்னும் கைக்கூடவில்லை. போலவே நான் வரிகளுக்கு இடையே இழையோடும் அழகியல்களை ரசிப்பவன். இப்போதைக்கு நிதானமாகவே செல்வோம். என்னை எதன் ஒன்றாகவும் நான் இன்னும் கட்டமைத்துக்கொள்ளவில்லை. ஆதலால் நாளையே நான் அலையடிக்கப்பட்டு வேறு திசைக்கும் நகரலாம். என் ஆளுமையே அவ்வாறுதானோ என்று தோன்றுகிறது. வாழ்க்கைக்கும் வேறு ஒரு பக்கமாக உலகியல் அலைச்சல். கிட்டத்தட்ட நான்கு தலைமுறையாக எதன் ஒன்றையும் கட்டமைக்காத குடும்பம். சரி அதை விட்டு விடுவோம். இனிவருவதை பார்ப்போம். ஒன்று நிச்சயம் வெற்று தனமாக எதுவொன்றாகவும் என்னை முன்வைக்க விரும்பவில்லை. தவறாக கூட இருக்கட்டும் ஆனால் வெற்றுத்தன்மை வேண்டாம். என்னுள் இருக்கும் எல்லாவற்றையும் உள்ளபடியே வெளிப்படுத்த நினைக்கிறேன். மற்றவர்கள் கோருவதை அல்ல. இதற்கு ஒரு சிறு மந்திரமாக நான் மனதில் வைத்துக்கொள்ளும் வாக்கியம் "நீங்கள் என்னை எதுவாக நினைக்கிறீர்களோ அதுவே நான்" என அவர்களிடத்தில் முடிவை விட்டு நாம் நம் அடையாளம் சார்ந்த சிக்கல்களிலிருந்து நம்மை விலக்கி கொள்வதுதான். உண்மையில் பன்முகமே நமது அடையாளம் அது ஒற்றைத் தன்மையுடைதல்ல. கட்டமைப்பதும் உடைப்பதுமே நம் வாழ்வு. இன்றைக்கு நானாக இருக்கும் நான். நாளை வேறொருன்று. இதை இப்போது எழுதும் நான் கூட வாழ்வின் ஒரு காலக்கட்டத்தில் உருவாகும் மனநிலையை பிரதிபலிப்பவனாகவும் கூட இருக்கலாம். வாழ்பென்பது முடிவு பெறாத மாற்றம்தான். கணிதத்தில் அணுகுகோடு (Asymptote) உண்டு. அதாவது ஒரு வளைக்கோடுக்கும் நேர்கோடுக்கும் இடையேயான தூரமென்பது முடிவிலியை நெருங்கும்போது சுழியாகும் என்பது. வாழ்வில் ஒழுங்கும் (order) அலைக்கழிவுங்கூட (chaos) அவ்வாறுதான். ஆனால் எந்த சூழலிலும் நாம் எவ்வாறாக இருந்திருக்கிறோம் என தள்ளி நின்று உணர்ந்துகொள்வதே இவ்வாழ்வில் நாம் நமக்கென்று பெற்றிருக்கொள்ளும் குறைந்த பட்ச அறிவாயிருக்கும். அதற்கு வாசிப்பு வேண்டும். ஏனெனில் நம் அனுபவ அறிவு என்பது அந்தந்த காலத்தில் வரலாற்றின் போக்கில் உருவான கற்பிதங்கள்தான்.
முற்றாக, என் சிந்தனைகளை குறித்து நான் அதிகம் அலட்டிக்கொள்பவன் அல்ல. ஒவ்வொரு முறை ஒரு சிந்தனை உதிக்கும் போதும் அதைக்குறித்தான அவநம்பிக்கையும் அதனுடன் சேர்ந்தே உதிக்கும். எதன் ஒன்றையும் மிகத் தீவிரமாக முன்வைத்து நிறுவ நினைக்கவில்லை. இன்னும் நிறைய வாசிக்க வாசிக்க இது மாறலாம். அதுவரை உரையாடலாம்.

Comments
Post a Comment